திருகோணமலையில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் (Photos)
திருகோணமலை நகரில் சந்தேகத்தின் பேரில் தமிழ் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சுவரொட்டிகளில்,
“பனிவிழும் இந்த இரவில் நடந்து படைத்தவன் மேல் பழியை எறிந்து விளம்பரம் மட்டும் விதைக்க நினைத்து விடைதெரியாத கூட்டம் நாங்கள், நெஞ்சத்தில் வஞ்சம் இல்லை எங்களின் கூட்டம் வேறு... நேர்கொண்ட பார்வையில் இனி குற்றம் குடி கொள்ளாது, வேந்தன் உரைத்த வேதம் சில விலங்குகளுக்கு தெரியாது... காலம் கடந்த ஞானம் கலவரத்தால் விடை தேடு மற்றும் இனத்தை அழித்த எதிரி இடத்தை மறக்கும் வரை அடி” என எழுதப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள பிரதேசத்தை அண்டிய வீதிகளில் இலங்கை இராணுவத்தினரின் பிரதான சோதனை சாவடிகள் அமைத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.








அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
