ஐ.நா உறுப்பு நாடுகளிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சந்தேகம்! - பத்மநாதன் கருணாவதி

By Independent Writer Feb 24, 2021 08:10 AM GMT
Report

ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடருக்கு முன்னராக ஐ.நா உறுப்பு நாடுகளிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சந்தேகம் உள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த செய்திக்குறிப்பில் மேலும்,

சந்தேகம் தொடர்பில் பின்னணியில் யார் என்பதைத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் நாம் முன்னர் கூறியிருந்தோம். இப்போது அந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

சிங்கள அரசால் தமிழினம் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக் குற்றங்களுக்குச் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதி கிடைக்குமென்பதில் உறுதியாக செயற்பட்ட பிரதிநிதிகள் பலர் திட்டமிட்டு சிவகரன், சுமந்திரன், கஜேந்திரகுமார் போன்றோரால் புறமொதுக்கப்பட்டனர். பல மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், கட்சிகள், யாழ் பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மத தலைவர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வீதியில் நீதிக்காக நின்று கதறிக்கொண்டு இருக்கின்றவர்களின் பிரதிநிதிகள் கூட இங்கே திட்டமிட்டு புறமொதுக்கப்பட்டனர்.

இவர்கள் யாவரும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துபவர்கள். இதில் சிலர் ஜெனிவா சென்று சாட்சியம் வழங்கியவர்கள். அனைவருமே திட்டமிட்டு புறமொதுக்கப்பட்டனர்.

இவ்வாறானவர்களை புறமொதிக்கியதன் பின்னணியில் சிவகரன், சுமந்திரன், கஜேந்திரகுமார் போன்றோர்கள் உள்ளனர்.

பிரித்தானியாவில் சுமார் இருநூற்றுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் இணைந்து பிரித்தானியா பிரதமர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச விசாரணையைத் துரிதமாக வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதுவே மிகவும் பலமான கோரிக்கையாகும்.

ஆனால் இங்கு என்ன நடந்தது இனவழிப்பு நடந்த வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக தேசத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் உள்ளிட்ட பல மக்கள் பிரதிநிதிகள் இருந்த போதும் நீதி கோரல் விடயத்தில் அவர்களை ஒருங்கிணைக்கவுமில்லை, கையொப்பம் வைக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டவில்லை.

இதைக் கழுத்தறுப்பு என மட்டும் கூற முடியாது, சிங்கள தேசத்தைச் சர்வதேசத்தில் தப்ப வைப்பதற்கான சதி என்றே கூட முடியும்.

சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரையில் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் தொடர்பில் ஆராய்ந்தால் அவர்களுக்கு நீதியைக் கோருபவர்கள் யாரென்றால் மூன்று கட்சியும், இரண்டு பொது அமைப்பும், இரண்டு தனி நபரும் இவ்வாறான சூழ்நிலையால் தான் இதுவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை என்ற ஒரு சொல் கூட சர்வதேச சமூகத்தின் அறிக்கையில் காணப்படவில்லை காரணம் என்ன?

இங்கு உள்ள ஏனைய பொது அமைப்புகள் கட்சித் தலைவர்கள் விரும்பவில்லை என்ற விடையத்தைச் சர்வதேச சமூகம் ஆராய்ந்த தன் நிமிர்த்தம் தமிழருக்கான சாதகமான அறிக்கை வரவில்லை இந்த யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பின்னர் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வந்த பின்னர் சொன்னார்கள், அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பலம் வழங்க முன்னர் கையொப்பம் இடாதவர்களை ஒருங்கிணைத்து அதில் கையொப்பம் வைத்து அனுப்புவதாக கஜேந்திரகுமாரால் பொய் கூறப்பட்டது.

35 நாட்கள் கடந்தும் அது நடத்தப்படவில்லை என்றால் இவர்களின் கொள்கைக்குச் சரிவு ஏற்பட்டதா? சர்வதேச சமூகத்திடம் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லாத ஒரு அறிக்கைதான் வரப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நாங்கள் இவர்களின் நிலைமையை அறிவதற்கு 24ஆம் திகதி பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லோருக்குமாக சேர்த்து ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் ஊடாக அறிவித்தோம். இந்த தீர்மானம் தொடக்கத்திலேயே கஜேந்திரகுமாரால் தோற்கடிக்கப்பட்டது.

எமது தொலைப்பேசிக்குத் தொடர்பு கொண்ட கஜேந்திரகுமார் அறிக்கை தயாரிக்க பொத்துவில் சுவாமி கொழும்பு வரும்படி நேற்று கூறிவிட்டார் என அப்பட்டமான பொய் கூறி ஒற்றுமை தன்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் சர்வதேச விசாரணையை தங்கள் கட்சி மட்டும் தான் வலியுறுத்தி வருகின்றது என வாயால் வடை சுடும் இவர்கள் சர்வதேச விசாரணையை ஒரு அங்குலம் எனும் முன்னெடுத்தார்களா? அல்லது இனவழிப்பு தொடர்பில் ஒரு ஆவணம் கூட இவர்களிடம் இருக்கின்றதா?சர்வதேசத்தில் இலங்கையைக் காப்பாற்றத் தீவிர முயற்சி செய்யும் இவர்களை உண்மையில் மக்கள் இனம் காண வேண்டும்.

நாம் எமது முன்னைய சந்திப்புகளில் மிகவும் திடமாக உளவுத்துறைகளின் பின்னணி எனக் குறிப்பிட்டு இருந்தோம்.

இவ்வளவு நாட்களின் பின்னர் நீங்கள் இப்போது அதன் நிதர்சனத்தை ஊடகங்கள் வாயிலாக எமக்குப் பின்னால் அறையவில்லை , முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார்கள் என அறிந்துள்ளீர்கள்.

இனியாவது நாம், கனவுகளிலிருந்து அகல வேண்டும். எமக்கான போராட்ட வெளிகளை, நாம் உருவாக்க வேண்டும். மக்களைப் போராட்டத்தின் மையமாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US