புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தம் (Photos)
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
பயணச்சீட்டிற்கான கட்டணம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளிக்கப்பட்டதை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக, தமது சேவைகள் இன்று(24) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிரந்தனர்.
அனைத்து புகையிரத நிலையங்களிலும் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து நேற்று (23) மாலை 6 மணி முதல் விலகுவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அந்தவகையில், மலையக புகையிரத நிலையங்களிலும் அதிபர்கள் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தனர்.
இதனால் பயணிகள் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்திருந்ததோடு, கடும் நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: திருமால்














குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
