பயணச்சீட்டு வழங்கும் பணி இடைநிறுத்தம்.
புகையிரத ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பயணச்சீட்டு வழங்கும் பணியினை இடைநிறுத்தி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதுடன் அதற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டது.
புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட 20 இற்கு மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
குறித்த பயணச்சீட்டுப் போராட்டம் இன்றும், நாளையும் நடைபெறுவதுடன் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புகையிரத சேவைகள் வழமைபோல இடம்பெற்று வருவதுடன் பயணிகள் பயணிச்சீட்டு
இல்லாமல் பயணித்து வருவதை அவதானிக்க முடிந்தது.