ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை பத்தரமுல்லையில் உள்ள, ஆட்பதிவு திணைக்கள தலைமையகம் மற்றும் நாட்டின் ஏனைய இடங்களில் உள்ள அனைத்து கிளை அலுவலகங்களையும் மறு அறிவித்தலை வரை மூட திணைக்களம் முடிவு செய்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் டி ஆர் பி வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேசிய அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பங்களை அனுப்பியவர்களுக்கு அவர்களுக்குரிய அடையாள அட்ட்டைகள், அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்வுகள், நேர்காணல்கள் மற்றும் கடவுச் சீட்டு போன்ற அவசர நோக்கங்களுக்காக அடையாள அட்டைகள் தேவைப்படுவோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி அவசர தேவையுடையவர்கள் அலுவலக இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
முதன்மை அலுவலகம்-0115226126/0115226100
தென் மாகாண அலுவலகம் -0912228348
வடமேல் மாகாண அலுவலகம் - 0372224337
கிழக்கு மாகாண அலுவலகம் - 0652229449
வடக்கு மாகாண அலுவலகம் - 0242227201




