இலங்கையில் 12 திட்டங்களுக்கான நிதியுதவி இடைநிறுத்தம்
இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்படும் வரை இலங்கையில் 12 திட்டங்களுக்கான நிதியுதவியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா இடைநிறுத்தியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட திட்டங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டமும் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு
இந்தநிலையில், இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்பட்டதன் பின்னர், திட்டங்களுக்கான நிதியுதவியை மீள ஆரம்பிக்கத் தயார் ஜெய்க்கா நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதிமொழியை ஜெய்க்கா
விரும்புவதாகவும் எவ்வாறாயினும், உள்ளூர் நிதியுதவியுடன் ஜெய்க்கா திட்டத்தின் சில பணிகள்
தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.