நெடுந்தீவு - குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை இடைநிறுத்தம் (Photos)
நெடுந்தீவு - குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்து செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு பயணம் செய்யவுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொடூரமான முறையில் கொலை
நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே அடையாளம் தெரியாதவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri