தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடு : சுமந்திரன்
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று(14.04.2024) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என முன்னைய காலங்களிலும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
குமார் பொன்னம்பலம், சிவாஜி லிங்கம் ஆகியோர் போட்டியிட்டுருக்கிறார்கள். அதற்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆதரவு எப்படியாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
ஆகவே இது சம்பந்தமாக நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது இந்த சரித்திர பின்னனியையும் அத்தோடு தென்னிலங்கையிலுள்ள இனவாத சக்திகள், தமிழ் வேட்பாளர் முன்வந்து விட்டார் என்பதை சொல்லி இனவாதத்தை தூண்ட திரும்பவும் முயற்சி செய்வார்கள் என்பதையும் அறிந்து சரியானதொரு தீர்மானத்தை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |