மத்திய சுற்றாடல் அதிகாரசபை தலைவரின் பணி இடைநிறுத்தம்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
சுற்றாடல் அனுமதி வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் நேற்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை(13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




