ரஞ்சனுடன் செல்ஃபி எடுப்பதை அனுமதித்த சிறை அதிகாரி பதவியில் இருந்து இடைநீக்கம்
அங்குனகோலபெலெஸ சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் செல்ஃபி எடுப்பதை அனுமதித்த சிறை அதிகாரி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் எடுத்துக்கொண்ட செல்பியை ராஜகருணா தமது பேஸ்புக்கில் பதிவிட்டமையை அடுத்தே சிறை அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ராஜகருணாவை சிறைக்குள் கைத்தொலைபேசி கொண்டுச் செல்ல விசேட அதிரடிப்படையினரே அனுமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ராஜகருணா ஒரு கைதியுடன் புகைப்படம் எடுத்து தனது நாடாளுமன்ற சலுகைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை உடனடியாக விசாரிக்குமாறு சிறைத்துறை ராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
