இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் மீள முன்னெடுக்கப்படும் – மஹிந்தானந்த
இடை நிறுத்தப்பட்டுள்ள கிராமங்களின் அபிவிருத்தி பணிகள் மீளவும் முன்னெடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே (Mahindananda Aluthgamage ) தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகளுக்கு 30 லட்சம் ரூபாவும், கிராம சேவகர் பிரிவிற்கு 40 லட்சம் ரூபாவும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அபிவிருத்தி பணிகளுக்காக 100 லட்சம் ரூபா இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
