நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
நேற்றைய தினம் கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை சட்ட தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படும் நபரினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சட்டத்தரணி அடையாள அட்டை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அடையாள அட்டை போலியானது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடையாள அட்டை
இந்த அடையாள அட்டையானது சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரது என்ற அடிப்படையில் பகிரப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அடையாள அட்டை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்படும் உறுப்பினர் இலக்கம் உச்சநீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட இலக்கம் மற்றும் க்யூ ஆர் கோட் என்பன போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அடையாள அட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்படும் அடையாள அட்டை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலியானது...
இந்த சட்டத்தரணிகள் சங்கத்தில் வழங்கப்படும் அடையாள அட்டையை போன்று ஒரு அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் செயலாளரது கையொப்பமும் வேறு ஒரு இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த அடையாள அட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டது அல்ல எனவும் இந்த அடையாள அட்டையில் புகைப்படத்தில் இருப்பவர் அல்லது பெயர் உறுப்பினர் இலக்கம் என்பன போலியானவை எனவும் போலியாக இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.