வீட்டிலிருந்து பெருமதியான பொருட்களை திருடிய சந்தேகநபர்கள் கைது: யாழில் சம்பவம்
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (06.10.2023) வீட்டு உரிமையாளர் உறவினர்களின் வீட்டுக்கு சென்று நீண்ட நாட்களுக்கு பின் வருகை தந்து வீட்டினை திறந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்ததுள்ளார. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டினை விசாரணை செய்த கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம்(08.10.2023) மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதோடு குறித்த வீட்டில் திருடப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.
பெறுமதியான பொருட்கள் மீட்பு
கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் சம்பவத்துடன் தொடர்பட்ட இருவர் தலைமறை வாகியுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விலையுயர்ந்த தொலைக்காட்சி, மின்மோட்டர், மடிக்கணினி மற்றும் பெறுமதியான தொலைபேசி, பெறுமதியான மணி கூடு என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
