கொழும்பில் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
கொழும்பு ஹைலெவல் வீதியில் அதிவேக மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் இன்று அதிகாலை மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம, பன்னிபிட்டிய, கொட்டாவ, எரவ்வல, பிலியந்தலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 11 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மக்களுக்கு இடையூறு
இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடப்பதாக பொலிஸாருக்கு அவசர அழைப்பு பிரிவுக்கு நேற்றிரவு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன.
அதனையடுத்து பொலிஸாரின் இந்த திடீர் சோதனையின் போது, அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
