வடக்கில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது!
வடக்கு மாகாண ரீதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை நேற்றையதினம் (19-03-2023) காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி. நிதர்சன் அவர்களது தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 22, 24, 26 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் வட்டுக்கோட்டை, சங்கானை, நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் போது அவர்களுக்கு எதிராக பல குற்றச்செயல் வழக்குகள் உள்ளதாக அறிய முடிகிறது.
பொலிஸாரின் நடவடிக்கை
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில், கழுத்தில் கத்தியை வைத்து நகைகள் மற்றும் தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது தொலைபேசி மற்றும் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்
தடுத்துவைக்கப்பட்டனர். அவர்கள் மூவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan
