விசேட சுற்றிவளைப்பு: வசமாக சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர்
நாடளாவிய ரீதியில் நேற்று (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158 பேரும், மதனமோதக போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 208 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 289 கிராம் 962 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 118 கிராம் 761 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 26 கிராம் 400 மில்லிகிராம் மதனமோதக போதைப்பொருளும், 9072 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri