பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த சந்தேகநபர் கைது
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (10.12.2022) இடம்பெற்றுள்ளது.
திருட்டு சம்பவம்
அண்மைய நாட்களாக கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மாதம் 16ஆம் திகதி அலுவலக விடுதி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நேற்றைய தினம் (10.12.2022) வீட்டினுள் மறைத்து வைத்திருந்த குறித்த மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரையும் சான்று பொருளையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.