கொழும்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு பெறுமதியான இரத்தினக் கற்களை தருவதாகக்கூறி ஐம்பது மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
தெஹிவளையைச் சேர்ந்த மொஹமட் மபாஸ் இட்டிகார் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
40 கோடி ரூபா மோசடி
சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேநகபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பிரபல இரத்தினக்கல் வர்த்தகர்கள் உட்பட பலரை ஏமாற்றி 40 கோடி ரூபாவை மோசடி செய்தமை தொடர்பான வழக்கு கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் சார்ஜன்ட் (23072 விஜித நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri