இருவேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில்
திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் கொள்ளை மற்றும் கசிப்பு உற்பத்தி போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று(27) உத்தரவிட்டுள்ளார்.
சேனாநாயக்க மாவத்தை, கந்தளாய் பகுதியை 49 வயதுடைய ஒருவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக கந்தளாய், முள்ளிப்பொத்தானை போன்ற பிரதேசங்களில் கடைகளை உடைத்து கொள்ளையிட்டமை மற்றும் கந்தளாய் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்தமை போன்ற குற்றச்செயல்களுடன் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
பின் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்திய போதே
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
