சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை சேனைக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி சூட்சுமமாக மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
மேலும் சந்தேக நபரும் மீட்கப்பட்ட மதுபான வகைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

66 வயதுடைய பெண் சந்தேக நபரை இதன் போது கைது செய்த பொலிஸார் ஒரு தொகை பணம் மற்றும் பல்வேறு மதுபான வகைகளை பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக மதுபான விற்பனை அதிகரித்துள்ளதுடன் அந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam