பல்வேறு திருட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு கடூழிய சிறைத்தண்டனை
பல்வேறு திருட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (17.06.2026) கிளிநொச்சி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..
சந்தேகநபர் கைது
இந்த நிலையில் சந்தேகநபர் கடந்த மாதம் தண்ணீர் பம்பி திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் 16 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.