சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பியோடிய சந்தேகநபர் : நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் அம்பாறை (Ampara) மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
இதன்போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது
28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக சிறைச்சாலை பேருந்தில் அழைத்து வரும் போது இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

தப்பி சென்ற சந்தேக நபர் சம்மாந்துறை உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த ரிசாட் முகம்மட் சாதிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 07ஆம் திகதி (07.12.2024) குறித்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri