காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருடன் சந்தேக நபரொருவர் கைது (Photos)
அம்பாறை - காத்தான்குடி பகுதியில் ஐஸ் போதைப்பொருடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் நேற்று(23) கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதிரடிப்படையினர் நடவடிக்கை

மேலும் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா வீதி அலியார் சந்தியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.

இதன் போது கைது செய்யப்பட்டு சந்தேக நபர் 37 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர், நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam