சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது
சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்புத் தரவை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (2) சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை தொடர்ந்து மேற்குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட நடவடிக்கை
இதன் போது, மறைத்து வைக்கப்பட்ட 770 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருள்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri