யாழில் 80 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் கைது
யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (20.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது 28 வயதுடைய சந்தேகநபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை
இந்த கைது நடவடிக்கையின் போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் தெல்லிப்பழை பொலிஸாரிடம்
பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கமைய சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam