யாழில் 30 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபரொருவர் கைது
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாதரவத்தை - பெரிய பொக்கணை பகுதியில் 30 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (05.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாதரவத்தை - பெரிய பொக்கணை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது
சந்தேகநபர் தனது வீட்டிற்கு அருகே உள்ள காணி ஒன்றில், கசிப்பினை போத்தல்களில் அடைக்கும்போது காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்றுப் பொருட்களுடன் அச்சுவேலி பொலிஸ்
நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டவுடன் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri