11 கஜமுத்துக்களுடன் கைதான சந்தேகநபர்: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு (Batticaloa) - காந்தி பூங்கா பகுதியில் அரியவகை 11 கஜமுத்துக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி சட்டவிரோத வியாபார நடவடிக்கை ஒன்றிற்காக சந்தேகநபர் வருகை தந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படை குழு கண்காணிப்பில் ஈடுபட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயது மதிக்கத்தக்க மயிலவெட்டுவான் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
சட்ட நடவடிக்கைக்காக சந்தேகநபர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தற்போது சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறுகிய காலத்தில் இ.தொ.கா 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது: செந்தில் தொண்டமான் பெருமிதம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
