யாழில் நீண்ட நாள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் நீண்ட காலமாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (29.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லியடியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகிய நிலையில், நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட பொருட்கள் மீட்பு
கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டு வெற்று சமையல் எரிவாயு கொள்கலன்கள், தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, இரண்டு பவுண் தங்கச் சங்கிலிகள் இரண்டு ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.