கல்கிஸ்ஸ பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நபரின் அதிர்ச்சி செயல்
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு குற்றச் சம்பவங்கள், வீடு புகுந்து கொள்ளை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்ய பொலிஸார் சென்றனர். இதன்போது செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்ட பதுங்கு குழியிலிருந்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
அந்த நபரை துரத்தி சென்ற போது கழிவுநீர் வாய்க்காலில் குதித்ததுடன் கூர்மையான கத்தியை எடுத்து, வயிற்றில் சரமாரியாக குத்திக் கொண்டுள்ளார்.
சந்தேக நபர் கைது
இந்த நிலையில் சந்தேகநபர் நேற்று மாலை உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, வயிற்றில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கல்கிசை, படபந்துருவத்த, கோயில் வீதி,கலாபுர போன்ற பிரதேசங்களில் இரவு பகலாக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரை கைது செய்யச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் அப்பகுதியில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கொள்ளைச் சம்பவம்
அந்த நபர் பொலிஸாரைக் கண்டதும் கால்வாயில் குதித்து தனது வயிற்றில் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொண்ட சம்பவத்தை நேரில் பார்த்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் வீடு உடைப்பு மற்றும் குற்ற வழக்குகளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் பல தடவைகள் கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
