சுற்றுலாப் பயணியை ஏமாற்றி வடை விற்றவருக்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை
களுத்துறை(Kalutara) பிரதேசத்தில் சுற்றுலாப் பயணி ஒருவரை ஏமாற்றி வடை மற்றும் தேனீர் விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சுற்றுலாப் பயணியை ஏமாற்றி கூடுதல் தொகைக்கு வடை மற்றும் தேனீர் விற்பனை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
இந்த காணொளி பகிர்வைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
களுத்துறை பலாதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடை உரிமையாளர் கிடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி குறித்த நபர் பணம் பறித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் நாளைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
(தொடர்புடைய செய்தி)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
