திருகோணமலையில் விஷேட பொலிஸ் அதிரடி படையினரிடம் வசமாக சிக்கிய நபர்
திருகோணமலை - கப்பல்துறை பகுதியில் 1.68 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கந்தளாய் - சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப்
படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் வசமாக சிக்கியதாக விஷேட பொலிஸ் அதிரடி படையினர்
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை - கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த டேவிட் சுசந்த குமார (38 வயது) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகளின் பின்னர் அவரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக சீனக்குடா பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam