மருதங்கேணி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று(01) கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றாவின் கணவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது
கொலை செய்யப்பட்டவர் மருதங்கேணி பகுதிக்கு சென்று கொண்டிருக்கும்போது வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
கத்தி குத்திற்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri