திருகோணமலையில் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த இளைஞர் கைது
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தமலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோமரங்கடவல பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞரிடமிருந்து 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல - கந்தமலாவ பகுதியைச் சேர்ந்த என்.ஏ.டிலான் தீக்ஸன (21 வயது) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும், தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam