பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள தகவல்
பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பில் தகவலொன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வெளியிட்டுள்ளார்.
விடுமுறைகளில் மாற்றம்
அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்று நோய் காலத்தில் இருந்த நிலைமையில் இருந்து இன்றைய நிலைமை வேறுபட்டுள்ளது.
| எந்நேரமும் தயாராக இருக்குமாறு அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்! தனியார்துறையினருக்கு விசேட அறிவிப்பு |
மேலதிக அமர்வுகள்
ஆரம்ப தரங்களுக்கான ஆசிரியர்களுக்கு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மேலதிக அமர்வுகள் இருக்கும்.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு செப்டெம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலதிக நிகழ்ச்சிகள் உட்பட மீட்டல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.
அத்துடன் வார இறுதிக்குள் எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்குத் தீர்க்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam