அவுஸ்திரேலியாவில் குடியேற திட்டமிடும் இலங்கை நட்சத்திரம்
2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற சுசந்திகா ஜெயசிங்க நாடு திரும்புவது குறித்து நிச்சயமற்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
தனது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை முதன்மை நோக்கமாகக் கருதியே அவுஸ்திரேலியாவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமயந்தி தர்ஷா
இதேவேளை, ஆசியப் பதக்கம் வென்ற சமகால தடகள வீராங்கனையான தமயந்தி தர்ஷாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |