உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்! எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை: ரணில்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டிய எச்சரிக்கை தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் எந்தவொரு முன்னாள் அமைச்சர்களுக்கும் எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களை விசாரணை செய்ய ஆணைக்குழுவின் முழு அறிக்கையும் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேநேரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டிய எச்சரிக்கை தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை ஆணைக்குழு ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது என்றும் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பில் தாம், ஒரு தளர்வான அணுகுமுறையைக் காட்டியதற்காக ஆணைக்குழு கூறிய குற்றச்சாட்டுகளை ரணில் மறுத்துரைத்தார்.
அரசியல் பொறுப்பின் அளவுகோல்கள் அல்லது குற்றப் பொறுப்பின் அளவுகோல்கள் என்று எடுத்துக்கொண்டால், தளர்வான அணுகுமுறை என்று எதுவும் இல்லை.
எனினும் நிச்சயமாக தீவிரவாதத்தை ஏற்றக்கொள்ளவில்லை என்று ரணில் தெரிவித்துள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் தொகுதியை இன்று சட்டமா அதிபர் ஜனாதிபதியின் செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர்-டப்புல டி லிவேரா ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டதாக அவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து நடவடிக்கைகள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரை சட்டமாஅதிபர் கோரியுள்ளதாகவும் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முகமாகவே இந்த அறிக்கைகளும் ஆவணங்களும் கோரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
