விவசாய அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு
விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், தேங்காய்களின் மொத்த தினசரி நுகர்வு சுமார் 4.5 மில்லியன்கள் ஆகும். எனினும் தேங்காய்களின் தினசரி உற்பத்தி சுமார் மூன்று மில்லியன்கள் என்று தெரியவந்துள்ளது.
எனவே, இடவசதி உள்ள ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் தென்னையை பயிரிட மக்களை ஊக்குவிக்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு தேசிய தென்னை அபிவிருத்திச் சபைக்கு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
நாட்டின் நுகர்வுக்கு பயன்படக்கூடிய பெருமளவிலான தென்னை மரங்கள் நாளாந்தம் அழிக்கப்படுகின்றன.
தேசிய தென்னை அபிவிருத்தி
இலங்கையில் மொத்த தேங்காய் உற்பத்தியில் 75 வீதம் உள்ளூர் நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனினும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இன்னும் அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்காரணமாக, இடவசதி உள்ள ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் தென்னை மரங்களை
வளர்க்க மக்களை ஊக்குவிக்கும் திட்டத்தை செயல்படுத்த தேசிய தெங்கு அபிவிருத்தி
திணைக்களத்துக்கு விவசாய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
