வைத்தியசாலையில் சுரேஷ் சலேக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பெண் தாதி - நடந்தது என்ன..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, நேற்று முன்தினம் முதல் மருந்துகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உணவு தவிர்ப்பு போராட்டம் மற்றும் உடலில் ஏற்பட்ட சிக்கலான நிலைமைகள் காரணமாக சுரேஷ் சலே, கடந்த 07ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சலேவை கண்டித்த தாதி
அங்கு அவருக்கு சேலைன் ஏற்றப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ச்சியாக உணவையும் மருந்தையும் உட்கொள்ள மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தாதி ஒருவர், சலே மருந்து உட்கொள்ளாமை குறித்து கடுமையாக கண்டித்து அவருக்கு மருந்துகளை வழங்கியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
“இது வைத்தியசாலையில் இருக்கும் நோயாளிகளை உயிரிழக்க அனுமதிக்க முடியாது. நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைக் குடிக்க வேண்டும்.” என சலேவிடம் கடுமையாகக் கூறியுள்ளார்.
மேலும் பலவந்தமாக மருந்துகளை உட்கொள்ள வைத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எனினும், மருந்துகளை உட்கொண்ட போதிலும் சலே தொடர்ந்தும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.