சுரேஷ் சலேவை மீட்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவின் மாஸ்டர் பிளான்! அரசாங்கத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இரகசிய தகவல்
சுரேஷ் சலேவை மீட்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவால் மிக துல்லியமான மற்றும் கடும் இரகசியமான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மிக பயங்கரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த தகவலை லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களாவது,
இரகசிய அறை (Omega Room)
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிஉயர் பாதுகாப்பு வளாகத்திற்குள் உள்ளக நபர்களால் 'ஒமேகா அறை' (Omega Room) என்று அழைக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகளைக் கொண்ட இரகசியப் பிரிவொன்று அமைந்துள்ளது.

இந்தப் பிரிவானது இராணுவத்தினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பிரிவிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும்.
இதற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே நுழைய அனுமதி உள்ளதோடு சாதாரண இராணுவப் பணியாளர்கள் உள்ளே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் அன்றாட நடவடிக்கைகளை மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் கண்காணித்து வருவதோடு அவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீப்தி ஆரியசிங்கவுக்கு மட்டுமே தவல்களை வழங்க முடியும்.
இந்த அறையானது ஸ்ரீலங்கா டெலிகொம்மின் அதிவேக பைபர் ஒப்டிக் (Fiber Optic) தகவல் தொடர்பு உயர் தொழில்நுட்ப மடிக் கணனிகள் மற்றும் சிக்னல் புலனாய்வுத் தகவல்கள் (Signal Intelligence) மற்றும் சைபர் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பிரத்தியேக அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு இலக்குகள் மீது தாக்குதல்
இந்த அமைப்பானது எல்லைக் கண்காணிப்பு அல்லது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அன்றி முற்றிலும் உள்நாட்டு இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் செயற்றிட்டமாக உண்மை தகவல்களை மறைத்தல் மற்றும் போலித் கருத்துக்களை உருவாக்குதல் போன்ற படிமுறைகளை கொண்டுள்ளன.
தங்களது புவியியல் இருப்பிடம் மற்றும் நிறுவன அடையாளத்தைக் கண்டறிவதைத் தடுப்பதற்காக வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய உயர் மட்ட விபிஎன் (VPN - Virtual Private Network) வலைப்பின்னல்களைப் பயன்படுத்துகின்றனர்.
இவற்றைப் பயன்படுத்தி தங்களது டிஜிட்டல் செயல்பாடுகளை வெளிநாட்டு சர்வர்கள் (Servers) ஊடாகத் திசை திருப்புகின்றனர்.
யாராலும் கண்டறிய முடியாத போலி மின்னஞ்சல் முகவரிகளின் (Email addresses) வலைப்பின்னல்களை உருவாக்குகின்றனர். பின்னர் இவற்றின் ஊடாகப் பாரிய அளவில் போலி முகநூல் கணக்குகளை (Phantom Facebook Accounts) உருவாக்குதல்.
குறிவைக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய நபர்கள்
மேலும் இந்தப் பிரிவுக்குள் இருக்கும் ஒரு பிரத்தியேகக் குழுவினால் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சமூக ஊடக அல்காரிதம்கள் (Algorithms) ஊடாக வேகமாகப் பரப்புவதற்கு என்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட கிராபிக்ஸ் மீம்கள் (Memes) மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் உருவாக்கப்படுகின்றன.
இவை இலக்கு வைக்கப்பட்ட நபர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவின் முக்கிய இலக்காக மூவர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்க ஆகியோராவர். ஒமேகா அறையின் தெளிவான இலக்கு இந்த அதிகாரிகளைப் பகிரங்கமாக அசெளகரியத்திற்குள்ளாக்குவது மட்டுமல்ல.

அவர்களின் உளவியலை பாதிப்படைய செய்தல் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வை ஏற்படுத்துவது மற்றும் அவர்கள் மீதான பொது நம்பிக்கையை அழிப்பதே இதன் நோக்கமாகும்.
ஒமேகா அறையினால் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு சாதகமான பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏனைய நபர்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அதே போலிக் கணக்குகளின் வலைப் பின்னலைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் அவரது பிம்பத்தை செயற்கையாக உயர்த்துவது இதன் மூலம் நடக்கிறது.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam