இரவில் உடைகளின்றி சுரேஷ் சாலே - கணவருக்கு நடந்தது என்ன - கதறும் மனைவி
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சுரேஷ் சாலே, சிறைச்சாலைக்குள் மிக மோசமான நிலையில், மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக அவரின் சட்டத்தரணிகளால் நீதிமன்னறத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், கடந்த வாரம், சுரேஷ் சாலேவின் மனைவி மிகுந்த மனவேதனையுடன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், தனது கணவர் எதிர்கொண்டுள்ள கடுமையான நிலைமை குறித்து மிகவும் உருக்கமான மற்றும் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார்.
இதற்கிடையில், அவர் முன்னதாக அப்பாவி மக்களுக்கு மேற்கொண்ட சித்திரவதைகளே தற்போது அவருக்கு ஏற்படுகின்றன என்று ஒரு சில தரப்பினர் கருத்துக்களும் முன்வைத்து வருகின்றனர்.
இதன் முக்கிய பின்னணி குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
சுரேஷ் சாலேவுக்கு கடும் சித்திரவதை..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - பகிரங்கப்படுத்தும் மகிந்த தரப்பினர்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri