இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்..! பொதுமக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து தொடர்பாக தேடப்படும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் கடந்த (31) ஆம் திகதி இரவு சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் சிகிச்சைக்காக ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து மீகொட பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டு, ஜூன் 01 அன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சந்தேகநபர் ஜூன் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, விபத்து நடந்த நேரத்தில் சாரதியுடன் மூன்று பேர் பயணம் செய்துகொண்டிருந்ததும், சாரதி கைது செய்யப்பட்டபோது அந்த மூவரும் வாடகை காரிலிருந்து இறங்கித் தப்பிச்சென்றதும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மூன்று சந்தேகநபர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் விசாரணை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
01 சந்தேகநபர் விவரங்கள் பெயர்:- அத்தநாயக்ககே டான் வசந்த
முகவரி:- எண். 243/D, குடமடுவ, சித்தமுல்ல, பிலியந்தல (வண்டியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்)
02 சந்தேகநபர் விவரங்கள் பெயர்:- எஸ்.கே. குமார என்ற செல்லமுத்து செல்லக்குமார்
முகவரி:- எண். 342/D, பெலன்வத்த, பன்னிப்பிட்டிய
03. சந்தேகநபர் விவரங்கள் பெயர்:- டான் சரத் ஹெட்டிகே
முகவரி:- எண். 337/07, பெலன்வத்த, பன்னிப்பிட்டிய.
அதன்படி, சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
தொலைபேசி எண்கள் - அதிகாரி - மீகொட பொலிஸ் நிலையம் 071-8592179 போக்குவரத்து அதிகாரி, மீகொட பொலிஸ் நிலையம் 077-94941