சுரேஷ் சாலேயின் கைதை வரவேற்கும் சஜித் அணி! நிலக்கரி ஊழலைத் திசைதிருப்பும் முயற்சியா என்றும் சந்தேகம்

Easter Attack Sri Lanka Mujibur Rahman Crime Suresh Salley
By Rakesh Feb 26, 2026 12:00 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

இருப்பினும், இந்தத் திடீர் கைது நடவடிக்கையானது தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி ஊழல் விவகாரத்தை மக்கள் மத்தியிலிருந்து திசைதிருப்புவதற்காக அரசால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தந்திரோபாய முயற்சியோ என்ற பலத்த சந்தேகத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (25)புதன்கிழமை ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரே மேற்படி விடயங்களைக் கூறியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்: பிள்ளையான் - சுரேஸ் சாலே அடுத்தது யார்..!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்: பிள்ளையான் - சுரேஸ் சாலே அடுத்தது யார்..!

முஜிபுர் ரஹ்மான் 

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சுரேஷ் சலே மீது நீண்டகாலமாகப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. எனவே, அவரது கைது வரவேற்கத்தக்கது.

சுரேஷ் சாலேயின் கைதை வரவேற்கும் சஜித் அணி! நிலக்கரி ஊழலைத் திசைதிருப்பும் முயற்சியா என்றும் சந்தேகம் | Suresh Salley Arrested Opposition Support

எனினும், இந்த விசாரணைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியே தற்போதைய அரசின் பிரதி பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கின்றார்.

விசாரணைகள் சுயாதீனமாக நடைபெற வேண்டுமாயின், அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

சுஜித் சஞ்சய பெரேரா 

"சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கையை நாம் கொள்கை ரீதியாக வரவேற்கின்றோம். ஆனால், தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி கொள்வனவு மோசடியை மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதற்காகவே இந்தத் திடீர் கைது அரங்கேற்றப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

சுரேஷ் சாலேயின் கைதை வரவேற்கும் சஜித் அணி! நிலக்கரி ஊழலைத் திசைதிருப்பும் முயற்சியா என்றும் சந்தேகம் | Suresh Salley Arrested Opposition Support

இவ்வாறான கைதுகளின் ஊடாக நிலக்கரி ஊழலை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இது குறித்தும் முறையான விசாரணைகள் அவசியம் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி உண்மை கண்டறியப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் வலியுறுத்தினர்.

நான் செய்தது தப்பு தான் - ரஷ்ய பெண்களுடன் தொடர்பு! உண்மையை ஒத்துக்கொண்ட பில் கேட்ஸ்

நான் செய்தது தப்பு தான் - ரஷ்ய பெண்களுடன் தொடர்பு! உண்மையை ஒத்துக்கொண்ட பில் கேட்ஸ்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US