சுரேஷ் சலே கைது விவகாரம்: மார்ச் 3ஆம் திகதி சபையில் விவாதங்கள்
மார்ச் மாதத்துக்கான நாடாளுமன்றத்தின் முதலாவது வார அமர்வுகள் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதான நடவடிக்கைகள்
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
அமர்வு நடைபெறும் நாள்களில் மேற்கொள்ளப்படவுள்ள பிரதான நடவடிக்கைகள் வருமாறு:- மார்ச் 4ஆம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
மார்ச் 5ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு எதிரான சவால்கள் மற்றும் உரிமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுரேஷ் சாலே கைது தொடர்பில் விசேட விவாதங்கள்
இவற்றுக்கு மேலதிகமாக, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் சபையில் விசேட விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
இது குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் Cineulagam
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri