சிறைச்சாலையில் அழுது புலம்பிய சுரேஷ் சலே
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதான துவான் சுரேஷ் சலே சிறைச்சாலையில் அழுது புலம்பியதாக முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலேவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தனது தாத்தாவும் தந்தையும் ராணுவ வீரர்கள் என அவர் கூறியதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
நன்றி மறந்த தேசம்
மேலும் தனது குடும்பத்தில் மூன்று சகோதரர்களும் ராணுவத்தில் டமையாற்றியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சகோதரர் போரில் காயமடைந்து ஊனமுற்றிருப்பதாகவும், தமது மற்றும் ஒரு சகோதரர் ராணுவ மேஜர் ஜெனரலாக தற்பொழுதும் கடமையாற்றி வருவதாக சலே தம்மிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு இவ்வளவு சேவை ஆற்றிய ஒரு குடும்பத்திற்கு இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டமை வருத்தம் அளிப்பதாக சலே வருத்தப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை இழந்து 37 ஆண்டுகளாக நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி உள்ளதாக சலே தம்மிடம் கூறியதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சேவையை வழங்கிய தமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை கவலை அழிப்பதாகவும் இந்த தேசம் நன்றி மறந்த தேசமாக அடையாளப்படுத்த நேரிட்டுள்ளது என சலே மனம் வருந்தி கண்ணீர் மல்கினார் என தெரிவித்துள்ளார்.
தாம் குறிப்பிட்ட இந்த விடயங்கள் உண்மையானவை எனவும் இதற்கு தாமும் சலேவும் உரையாடிய விடயங்களை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam