மரணத்தை நோக்கி நகர்கிறாரா சுரேஷ் சலே.. நரகத்திற்கு திரும்ப விரும்பவில்லையாம்!!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான் மீண்டும் தடுப்புக் கூடத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றும், மரணமே தனக்குப் பொருத்தமானது என்றும் சுரேஷ் சலே தனது சட்டத்தரணியிடம் தெரிவித்ததாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..
உண்ணாவிரதம் தொடரும்..
குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக்காவலின் கீழ் உள்ள சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்தநிலையில், அவருடைய தனிப்பட்ட சட்டத்தரணியை அவரைச் சந்தித்த போது மேற்கண்ட விடயங்களை சுரேஷ் சலே தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதன்போது, மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைகள் குறித்து சலேவின் சட்டத்தரணி அவரிடம் தெளிவுபடுத்தியதாகவும், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், சட்டத்தரணியின் வேண்டுகோளை மறுத்த சுரேஷ் சலே, தான் மீண்டும் தடுப்புக் காவல் கூடத்திற்கு திரும்ப விரும்பவில்லை என்றும், அந்த இடம் ஒரு நரகம் போன்றது எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் தன்னோடு தனிப்பட்ட விரோதம் கொண்டிருப்பதாகவும் சுரேஷ் சலே இதன்போது தனது சட்டத்தரணியிடம் குறிப்பிட்டுள்ளதுடன், உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 15 மணி நேரம் முன்
மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri