எலி, கரப்பான் பூச்சிகள் நிறைந்த சிறையில் சுரேஷ் சாலே: ஆதாரத்தை முன்வைக்காத அமெரிக்க FBI - சரத் வீரசேகரவின் தகவல்
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தியாவிலும் மலேசியாவிலுமே இருந்ததாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஆறு ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ அல்லது அமெரிக்காவின் FBI அமைப்போ சுரேஷ் சாலேவுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
பொய்க் குற்றச்சாட்டுகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அவர் இந்தியாவிலும் மலேசியாவிலும் தங்கியிருந்த நிலையில், அரசியல் தஞ்சக் கோரிக்கை பெறுவதற்காகச் சிலரால் கூறப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கப் பெரும் பங்காற்றிய ஒரு அதிகாரியை, தமிழ் புலம்பெயர் அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதற்காக இன்று எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த ஒரு சிறையில் அடைத்து அரசாங்கம் பழிவாங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan