சுரேஷ் சலேயின் அடிப்படை உரிமை மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டே இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (23) இந்த மனு உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இதனை செப்டம்பர் 25ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 மணி நேரம் முன்
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri