இலங்கையை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்கள்! பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் வாரங்களில் டீசல், பெட்ரோல், ஜெட் எரிபொருள் மற்றும் உலை எண்ணெய் உள்ளிட்ட பல எரிபொருள் சரக்குகள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம்வெளியிட்ட தகவலின்படி, 37,000 மெட்ரிக் டொன் டீசலை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் நாளை, மறுநாள் நாட்டிற்கு வந்து சேர உள்ளது.
அட்டவணை விபரம்
30,000 லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோல் மற்றும் 5,000 லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலை ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் இந்த மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு வந்து சேர உள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட எரிபொருள் ஒப்பந்தப்புள்ளியின் கீழ், அடுத்த மாதம் மேலும் பல எரிபொருள் டேங்கர்கள் நாட்டிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டவணைப்படி, தலா 37,000 மெட்ரிக் டொன் டீசலை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் ஏப்ரல் 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் வந்து சேர உள்ளன.
சரக்கு கப்பல் விபரம்
30,000 மெட்ரிக் டொன் உலை எண்ணெய் கொண்ட ஒரு சரக்கு கப்பல் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் வந்து சேர திட்டமிடப்பட்டுள்ளது.

35,000 மெட்ரிக் டொன் ஜெட் ஏ1 எரிபொருளை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,
அதே நேரத்தில் 30,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் கொண்ட மற்றொரு சரக்கு ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வந்து சேர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் இரகசியமாக நுழைந்த போர்க்கப்பல்! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam