ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதங்களுக்கு மத்தியில் சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையிலே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சுரேஷ் சலேவின் தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என வலியுறுத்தி சுரேஷ் சலேவின் தாயாரும், மனைவியும் அடுத்தடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதங்களை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்