சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சட்டத்தரணிகள் அச்சம்
இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சலே தொடர்பில் நீதிமன்றிற்கு இன்னமும் தகவல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே இந்த விடயத்தை நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். சுரேஷ் சலேவின் சட்டதரணிகளிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுரேஷ் சலுவின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட கூடும் என்பதற்கான போதிய அளவு ஏதுக்கள் காணப்படும் நிலையில் அவரை நீதிமன்றின் உரிய அனுமதியின்றி, வெளியே அழைத்துச் செல்வதனை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
நாட்டுக்காக சேவையாற்றிய சுரேஷ் சலே, அவரது பிள்ளையை பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
தொடர்பில் நீதிமன்றத்திற்கு தகவல்கள் வழங்கப்படாத நிலையில் சட்டத்தரணிகள் கோரும் விடயங்களுக்கு உத்தரவு வழங்க முடியாது என நீதவான் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரது வீட்டிற்கு சென்று வீட்டை சோதனையிட்டுள்ளதாகவும் அதன் போது அவரது மனைவி சோதனை செய்வதற்கு நீதிமன்ற அனுமதி உண்டா என வினவியதாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வீடு ஒன்றை சோதனையிட அனுமதி தேவையில்லை என அதிகாரிகள் கூறியதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரின் வீட்டிற்கு சென்றபோது ஒரு பெண் உத்தியோகத்தர் கூட அழைத்துச் செல்லப்படவில்லை என சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam